விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் தொடங்கி பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு TRP-யில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.

இந்த தொடருக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து TRP-யில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து அசத்தி வந்தது.இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலன்களாக மாறிவிட்டனர்.இந்த தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து வருகிறது.

பல வருடங்களுக்கு பிறகு தனது கணவர் வீட்டிற்கு திரும்பி வருகிறார் கண்ணம்மா,அவரை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.பல முக்கிய தருணங்கள் இருக்கும் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் விரைவில் தொடர் முடியப்போகிறதா.என்று கமெண்ட் அடித்து வந்தனர்.ஆனால் இந்த சீரியல் தற்போது நிறைவடையாது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சீரியல் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.