மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான Varane Avashyamund மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.

அடுத்ததாக இவர் நடித்துள்ள குரூப்,ஹே சினாமிகா,சல்யூட் உள்ளிட்ட சில படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.இதில் குரூப்,சல்யூட் உள்ளிட்ட படங்களின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வந்தது.

இன்று ராம் நவமியை முன்னிட்டு துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.Hanu Raghavapudi இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் அசத்தலான ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்அடித்து வருகிறது.