சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷூட்டிங் நடத்த அரசு அனுமதித்தவுடன் , இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளீன் ஷேவ் செய்த லுக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த போட்டோவில் கமெண்ட் அடித்த அயலான் பட இயக்குனர் சீக்கிரம் நம்ம லுக்குக்கு வாங்க பிரதர் , கேமரா ,ஆக்ஷன் சொல்லி ரொம்ப நாள் ஆகுது என்று தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து பலரும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.அரசும் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ளதால்,இது ஷூட்டிங் தொடங்குவதற்கான ஹிண்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

director ravikumar asks sivakarthikeyan to get ready for ayalaan shoot