அமராவதி என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் செல்வா. அமராவதி படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் பற்றிய தகவல் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனரின் மகன் திருமணம் என்பதால் அதில் அஜித் கலந்து கொள்வார் என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

வழக்கமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கும் அஜித் ஒரு சில சினிமா நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளில் சென்று கலந்துகொள்கிறார். இரு தினங்களுக்கு முன் ராஜீவ் கர்ணா - மீரா திருமணம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக மிக எளிமையாகத் தான் அந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. 

இசையமைப்பாளர் டி. இமான் மட்டும் நேரடியாக சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதன் புகைப்படம் வெளிவந்திருக்கிறது. மேலும் இயக்குனர் செல்வாவுக்கு நெருக்கமான பல சினிமா துறை பிரபலங்களும் திருமணத்துக்கு சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள்.

இருப்பினும் தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அஜித் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இயக்குனர் செல்வா அடுத்து வணங்காமுடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அவரது 27 வது படமாகும். அதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்து வருகிறார். அரவிந்த் சாமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்காக பல்வேறு எடுத்துக்கொண்டு நடித்து வருகிறாராம். இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது நம் கலாட்டா.