தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது செம பிஸியான நட்சத்திரங்களாக மாறிவிட்டனர்.தமிழில் பெரிய ஹிட் அடித்துள்ள இந்த தொடர் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது குக் வித் கிறுக்கு தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.தமிழில் முட்டை வைத்து டாஸ்க் கொடுத்தது போல கன்னடத்திலும் தரப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.ஈந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்