எதார்த்தமான ஹீரோயிசம் கலந்த நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பு, காமெடி காட்சிகளில் கலக்கி வரும் இவர், சீரான டான்சரும் கூட. கிராமத்து நடனம், வெஸ்டர்ன், குத்து என வித்தியாசமான SK-வின் டான்ஸுக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தைகள் கூட இவரது டான்ஸ் ஸ்டெப்ஸை பின்பற்றி ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நடனம் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிவா நல்ல டான்சர், வெவ்வேறு ஸ்டைலில் நடனமாடும் திறன் கொண்டவர். மான் கராத்தே திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்ஷிகாவின் நடனம் குறித்து இந்த பதிவை செய்துள்ளார். ஆம் பிருந்தா மாஸ்டர் கூறியது போன்று, படத்தில் வரும் டார்லிங் டம்பக்கு பாடலில் பட்டையை கிளப்பியிருப்பர் சிவகார்த்திகேயன். 

சமீபத்தில் வெளியான செல்லம்மா பாடல் ப்ரோமோவில் கூட ராக்ஸ்டார் அனிருத்துடன் சேர்ந்து ஸ்டுடியோவில் டான்ஸ் ஆடி அசத்தியிருப்பார் சிவா. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

டிஜிட்டல் காலத்து ரொமான்ஸை கண்முன் கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு சில படங்களில் அவ்வப்போது பாடல்களும் எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த பாடலுக்கு அவர் தான் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் SK தலைகாட்டினால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். கோலமாவு கோகிலா படத்தில் இவர் எழுதிய கல்யாண வயசு தான் பாடல், ரசிகர்களின் பிலேலிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

சமீபத்தில் இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது. வெளியான சில நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்றும், அதிக லைக்குகளை அள்ளிய பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது. இயக்குனர் நெல்சன் சொல்வது போல், சிவகார்த்திகேயனின் செயல் வேற மாறி என்றே கூறலாம்.