கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அஸ்வின்குமார்.நிவின் பாலியின்Jacobinte Swargarajyam படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடித்தார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே நிறைய மிமிக்கிரி வீடியோக்கள் செய்து அசத்தி தனக்கென்று ஒரு முத்திரை பதித்திருந்தார்.கடந்த ஜூன் 12 அன்று கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் அஸ்வின்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இதற்கு கமல்ஹாசனே தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அஸ்வினுக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து அஸ்வின் தனது பிறந்தநாள் அன்று மீண்டும் ட்ரெட்மில்லில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த முறை அனிருத் இசையில் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த இரண்டு வீடியோக்களும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அஸ்வின் ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற வார் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஜெய் ஜெய் சிவசங்கர் என்ற பாடலுக்கு ஹ்ரித்திக் ஆடிய ஸ்டெப்பை அப்படியே ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ரசிகர்களிடம் ஹிட் அடித்திருந்தது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த முறை தனது படுக்கையில் படுத்தபடியே நடனமாடி வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்