தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை  திரையரங்குகளை கோவிலாக நட்சத்திர நடிகர்களை கடவுளாக ரசிகர்கள் தங்களை தாங்களே பக்தர்களாக பார்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது. தமிழகத்தில் முக்கியமான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வரும் நாட்களில் தியேட்டர்களில் பண்டிகை தான். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமா,ர் தனுஷ் என முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வரும் நாளன்று பல முன்னணி திரையரங்குகளில் விடிய விடிய திருவிழா கொண்டாடப்படும். வாணவேடிக்கைகள் சரவெடிகள் மத்தளங்கள் தாரை தப்பட்டைகள் ஆட்டம் பாட்டம் என திரையரங்க வாசல்கள் கலைகட்டும். 

அந்த வகையில் சென்னையில் முன்னணி திரையரங்குகளில் கமலா, ரோகினி,காசி போன்ற திரையரங்குகள்  ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய திரையரங்குகளாக இருக்கின்றன.சென்னையில் காசி தியேட்டரில் படம் பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

இந்நிலையில் காசி திரையரங்குகளின் நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள் தற்போது உயிரிழந்துள்ளார். மறைந்த திரு.மதிவாணன் அவர்களுக்கு வயது 73 . சென்னையில் மிக முக்கியமான முன்னணி திரையரங்குகளில் ஒன்றான காசி திரையரங்குகளின் நிறுவனரும் காசி குழுமத்தின் நிறுவனமான  திரு.மதிவாணன் அவர்களின் உயிரிழப்பு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரு.மதிவாணன் அவர்களின் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .