மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் பாக்ஸர்,சினம்,AV 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.அருண் விஜய் நடிக்கும் AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Arun Vijay AV 31 Update By Director Arivazhagan

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Arun Vijay AV 31 Update By Director Arivazhagan

இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த படம் குறித்த தகவலை படத்தின் இயக்குனர் அறிவழகன் கலாட்டாவுடனான லைவில் பகிர்ந்துகொண்டார்.இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தம் 45 நாட்கள் திட்டமிட்டிருந்ததாகவும் 20 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது இன்னும் 25 நாட்கள் நிலைமை சரியான பின் திட்டமிடப்படும் என்று தெரிவித்தார்.இந்த படம் அருண் விஜய்க்கும்,தனக்கும் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.