கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இறைவி. ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் இறைவி. SJ சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, ராதா ரவி ஆகியோர் நடித்திருப்பார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். 

Karthik Subbaraj Releases Raw Footage Of Iraivi

இன்றோடு இந்த படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகியுள்ளது. இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், என் மனதிற்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் நடித்த நடிகர்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று பதிவு செய்துள்ளார். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் SJ சூர்யா பேசும் முழு நீள வசனத்தின் வீடியோ லிங்க்கையும் இணைத்துள்ளார். 

Karthik Subbaraj Releases Raw Footage Of Iraivi

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். அதன் பிறகு சியான் விக்ரம் வைத்து சியான் 60 படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் தெரியவந்தது.