லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. 

Actor Mahendran About Master Trailer Update

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Actor Mahendran About Master Trailer Update

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த மஹேந்திரனிடம் இணையவாசி ஒருவர் படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டீர்களா ? ட்ரைலர் பார்த்த மற்ற நடிகர்கள் மாஸ், வேற லெவல் என்றெல்லாம் சொல்கிறார்களே... ஏதாவது அப்டேட் இருந்தா கூறுங்கள் என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த மஹேந்திரன், அய்யோ நானே இன்னும் பார்க்கவில்லை. ட்ரைலருக்கு தான் நானும் வெறித்தனமா காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.