தொலைக்காட்சியில் வரும் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி. 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்தி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து ஃபிரை டே என்ற படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானார். அடுத்து அவரது நடிப்பில் வெளியான ஜலேபி படம் பெரும் ஹிட்டானது.

தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார். படம் பெரிய அளவில் பேசப்படா விட்டாலும், டிகங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் பிஸியாக உள்ளார் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி.

இந்நிலையில் டிகங்கனாவின் வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. அதவாது மயில் ஒன்று நின்றிருக்க அதன் அருகில் செல்கிறார் டிகங்கனா சூர்யவன்ஷி. அப்போது ஆக்ரோஷமான மயில் அவரை விரட்டி விரட்டி தாக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத டிகங்கனா சூர்யவன்ஷி, செமயாக அலறிக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படி என்ன அந்த மயிலுக்கு உங்கள் மேல் கோபம் என கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ள டிகங்கனா சூர்யவன்ஷி, நான் ரொம்பவே பயந்துவிட்டேன். ஆனால் என் அம்மா மயில் உன்னை கட்டிப்பிடிக்கிறது என்று கூறி என்னை சமாதானப்படுத்தினார் என கூறியுள்ளார்.

டிகங்கனா கைவசம் சீட்டிமார் என்ற தெலுங்கு திரைப்படம் உள்ளது. மேலும் டார்க் பாத் என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)