தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா மாஸ் கிளாஸ் என இரண்டிலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.  கடைசியாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படமான சூரரைப்போற்று நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

சூரரைப்போற்று படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபிக்கும் விதமாக நடித்திருந்த சூர்யாவின் நடிப்பை ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழ் ரசிகப் பெருமக்களும் கொண்டாடினர், பாராட்டினர்.  இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்பர்ன் சர்வ தேச விருது விழாவில் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும் சூர்யாவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.S.தாணு தயாரிப்பில் தயாராகும் வாடிவாசல் திரைப்படத்திலும், பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் T.S.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் ட்விட்டரில் நடிகர் சூர்யாவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனைத் தொட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் கணக்கை தொடங்கிய நடிகர் சூர்யாவை தென்னிந்திய நடிகர்களிலேயே வெகு குறுகிய காலத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனைத் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
actor suriya twitter account reaches massive record of seven million followers