தமிழ் சினிமா பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து இன்று டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் ஃபிலிம் பெர்ஸ்னாலிட்டி தான் அர்ஜய். அவரது திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. கலாட்டா சமூக வலைத்தள பக்கங்களை தொடரும் திரை விரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாட விரும்பினோம்...

பழனியை பூர்வீகமாக கொண்டு எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர் அர்ஜய். வில்லன், கேரக்டர் ரோல், தாதாக்களின் ரைட் ஹாண்ட், பாசமிகு சகோதரன், ஹீரோவின் நம்பிக்கைக்கு உரிய நண்பன் என எந்த ரோலா இருக்கட்டும்..இயக்குனர்கள் சொல்வதை சிங்கிள் ஷாட்டில் சிக்ஸ் அடிக்கும் சுபாவம் தான் அர்ஜயின் சிறப்பு. 

actor arjai talks about his role in sulthan and rajinikanth annaatthe

பிஸியான ஆர்ட்டிஸ்ட்...பாண்டமிக் நேரம் வேற...தொலைபேசி நேர்காணலுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு நினைத்த போது, ஃபோன்ல இன்டர்வியூவா !!! ரெடி பிரதர் வாங்க போகலாம்னு சொன்னது எனர்ஜி பூஸ்டராக இருந்தது

முதல் கேள்வியா "என்னத்த" கேக்குறதுனு நினைத்த போது..."அண்ணாத்த" பத்தி சொல்லுங்க என்றோம் ! 

அண்ணாத்த - ரஜினி சார், ரஜினி சார், ரஜினி சார்(சந்தோஷம் நிறைந்த சிரிப்புடன்) என்று ஆரம்பித்தார். சினிமாவுல ஏதாச்சு சாதிச்சிட்டு ரஜினி சார பாக்கணும்னு ஆசை. அது அண்ணாத்த படத்துல நடிக்கிறப்போ நடந்துச்சு. சண்டக்கோழி 2 படம் மூலமா தான் இந்த வாய்ப்பு. சிவா சார் ஆஃபீஸ்ல இருந்து வந்த அழைப்பு... 

actor arjai talks about his role in sulthan and rajinikanth annaatthe

ரஜினி சார் கூட நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க...

தலைவர் கூட இருந்த ஒவ்வொரு நாளும் ஸ்பெஷல் தான்...எனக்கு விவரம் தெரிஞ்சி ரஜினி சார் நடிச்ச படிக்காதவன் படம் ரொம்ப பிடிக்கும். அதை அவர் கிட்ட பகிர்ந்துகிட்டத மறக்கவே மாட்டேன். அவர யங் லுக்-ல் பாக்கணும்னு ஆசை... நான் நினைச்சா மாதிரியே அண்ணாத்த ஷூட்ல கெத்தா, ஸ்டைலா, யங்கா தலைவர் வந்தாரு. 

அண்ணாத்த படத்துல நீங்க நல்லவரா ? கெட்டவரா ? 

நல்லவன் தாங்க...ரஜினி சார் கூட இருக்க மாதிரி காட்சிகள் தான். அண்ணாத்த அண்ணாத்தனு தான் ரஜினி சார கூப்பிடுவோம். 

உங்க நடிப்ப பாத்துட்டு சூப்பர்ஸ்டார் ஏதாச்சு பாராட்டினாரா ? 

ஒரு லாங் ஷாட் படத்துல இருக்கும். சிவா சார் ஒரே டேக்ல பண்ணனும்னு சொல்லிட்டாரு, நைட் ஷூட் வேற. அந்த காட்சிய சிறப்பா பண்ணிட்டேன். மானிட்டர்ல ரஜினி சார் பாத்துட்டு பாராட்டுனத மறக்கவே முடியாது. அன்னைக்கு நைட் தூக்கமே வரல. அவ்ளோ சந்தோஷம். அதுக்கு அப்பறோம் கேரவான்ல ரஜினி சார் கூட போட்டோ எடுத்துக்கிட்டேன். அர்ஜய் ரொம்ப அமைதியானவர் போலனு ரஜினி சார் சொன்னப்ப...என் மைண்ட் வாய்ஸ் அப்படியெல்லாம் இல்ல தலைவானு சொன்னது எனக்கு தான் தெரியும். 

வீரம், விஸ்வாசம் இந்த வரிசைல கிராமத்து வாசத்தோட அண்ணாத்த இருக்குமா ? 

அண்ணாத்த அசத்தலா இருக்கும். வேற மாதிரி ஒரு ரஜினி சார பாப்பீங்க. குடும்பங்கள் கொண்டாடுற மாதிரி, ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடுற மாதிரி நிச்சயம் இருக்கும். 

அண்ணாத்த செட்ல படக்குழு நபர்களுக்கு கோவிட்னு சொன்னப்போ உங்க ரியாக்ஷன் ?

தினசரி பக்காவா டெஸ்ட் எடுத்து, எங்கள நல்லா பாத்துக்கிட்டாங்க. ஒருத்தர விடாம டெஸ்ட் எடுத்து, சரியான முறைல ஷூட்டிங்க நடத்துனாங்க. அதுக்கு அண்ணாத்த படக்குழுக்கு நன்றிய சொல்லிக்கிறேன். 

actor arjai talks about his role in sulthan and rajinikanth annaatthe

சுல்தான் படத்துல உங்க நடிப்பு எல்லாருக்கும் பிடிச்சுருந்துச்சு.. அத பத்தி சொல்லுங்க !!!

வழக்கமா எல்லா இடத்துலயும் வில்லன் நடிகர்னு சொல்வாங்க. சுல்தானுக்கு அப்பறோம் காசினு கூப்பிட்றாங்க, தமிழ்நாட்ல தலையனு சொல்றாங்க.. ஆந்திராக்கு ஷூட்டிங் போனப்போ காசி, காசினு ரசிகர்கள் கூப்பிட்டாங்க.. அப்பறோம் தான் தெரிஞ்சிது சுல்தான் தெலுங்கு டப்பிங்ல என் கேரக்டர் பெயர் காசினு.. ரொம்ப மகிழ்ச்சி 

சூர்யா சார் உங்கள விசாரிச்சாராமே ??? 

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு சார் சொல்லி தான் தெரியும். சுல்தான் பாத்துட்டு அண்ணா உன்ன கேட்டாங்கனு சொன்னாரு. அர்ஜய் கூட நான் நடிச்சிருக்கேன்னு சூர்யா சார் நினைவுல வச்சிட்டு சொன்னாரு. மாஸ் படத்துல சூர்யா சார் கூட நடிச்சேன். 

ஃபிட்டா இருக்கீங்க... ஹீரோக்கான எல்லா தகுதியும் இருக்கு ! வருங்காலத்துல ஹீரோவா பாக்கலாமா ? 

வெளிப்படையா சொல்லனும்னா ஹீரோ ஆசை இல்லங்க. அந்த ப்ரெஷர என்னால தாங்க முடியுமானு தெரியல. அது மிகப்பெரிய பொறுப்பு. செட்ல நிறைய ஹீரோக்கள பாக்குறேன். அது நிஜமாவே பெரிய பொறுப்பு. எனக்கு பிரகாஷ்ராஜ் சார், நாசர் சார் மாதிரி நல்ல ரோல் வெர்சடைல் ரோல்ஸ் பண்ணனும். 

கலைத் தாகம் தீரா கலைஞன் அர்ஜயின் இந்த தொலைபேசி உரையாடல், சினிமா வாய்ப்பு தேடும் ஒவ்வொரு கலைஞனுக்கும் கோனாரு கைட் என்றே கூறலாம். இப்படி பட்ட கலைஞனின் பணிகளை கலாட்டா சுவடுகளில் பதிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா