இந்திய திரையுலக ரசிகர்களின் ஃபேவரட்டான சினிமா நட்சத்திரமான பிரபுதேவா ஆகச்சிறந்த நடன இயக்குனர் நடிகர் பிளாக்பஸ்டர் படங்களை இயக்கும் மாஸ் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். கடந்த பொங்கல் வெளியீடாக பிரபுதேவா நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா கெஸன்ட்ராவுடன் இணைந்து ஃபளாஷ்பேக் படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். முன்னதாக குழந்தைகள் கொண்டாடும் கலகலப்பான ஃபேன்டசி திரைப்படமாக பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில், பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால்குதிரை & இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் பிரபுதேவா அடுத்து நடிக்கும் திரைப்படத்தின் மிரட்டலான டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. ரேக்ளா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குனர் அன்பு எழுதி இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் ரேக்ளா திரைப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் இதோ…