டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையிலும் தல தோனியே முன்னிலை வகிக்கிறார். இவற்றுன், கேப்டனாக இருந்து தோனி
இதுவரை வென்று தந்த கோப்பைகளை தற்போது பார்க்கலாம்.

சாதனை மன்னன் என்று சோன்னால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியையே சொல்லாம். அந்த சாதனை எத்தனை பல சாதனைகளை இந்திய
அணிக்கா படைத்திருந்தாலும், ஐபிஎல் போட்டியிலும் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

தற்போது தோனி நிகழ்த்திய இன்னொரு சாதனை என்னவென்றால், அனைத்து டி20 க்களிலும் சேர்த்து மொத்தமாக அவர் 300 போட்டிகளில் கேப்டனாக இருந்து புதிய
சாதனையை தோனி படைத்திருக்கிறார்.

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் என கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது இந்த 2021 ஆம் ஆண்டு
வரையில் தோனியின் ஐபிஎல் சாதனைகளை திரும்பி பார்த்தால், அவர் மொத்தமாக இதுவரை 5986 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இவற்றுடன் தோனியின் சராசரி 38.87 ஆக உள்ளது. இவற்றுடன், அவர் அதிகபட்ச ஸ்கோர் 84 ரன்கள் எடுத்திருக்கிறார். 

அதே போல், விக்கெட் கீப்பராக தோனி 170 கேட்ச்கள், 69 ஸ்டம்பிங்குகள் செய்து சாதித்திருக்கிறார்.

தோனிக்கு அடுத்த இடத்தில் அதிக டி20 போட்டிகளில் கேப்டன்சி செய்தவர் மே.இ. தீவுகளின் டேரன் சமி இடம் பிடித்திருக்கிறார். டேரன் சமி மே.இ.தீவுகள், சன்
ரைசர்ஸ் ஹைதராபாத், பெஷாவர் ஸால்மி உள்ளிட்ட அணிகளுக்கு டி20 கேப்டனாக தோனிக்கு அடுத்து 208 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். 2

அதிக டி20 போட்டிகள் கேப்டன்சியில் கிங் கோலி 3 ஆம் இடத்தில் உள்ளார். அவர் மொத்தமாக 185 டி20 போட்டிகளில் விராட் கோலி கேப்டன்சி செய்தி இருக்கிறார்.

அதே போல், தோனியின் மற்ற சாதனைகளை ஒரு முறை திரும்பிபார்த்தோம் என்றால்,

- 2007 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2010 ஆம் ஆண்டு ஆசியை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2011 ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2016 ஆம் ஆண்டு ஆசிய போப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.