நடிகர்கள் மம்முட்டி மற்றும் முரளி இணைந்து நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி . தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, வேட்டை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது அடுத்த படத்தின் மூலம் தான் எப்போதும் வெற்றிப்பட இயக்குனர் தான் என்பதை நிரூபிக்க தயாராகி உள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #RAPO19 திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க, பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார்.  பிரபல இளம் நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மிரட்டலான வில்லனாக நடிகர் ஆதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கௌடாவும் நடிக்கின்றனர். 

லிங்குசாமியின் #RAPO19 படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.சமீபத்தில் நடிகர் ராம் பொத்தினேனி உடற்யிற்சியின் போது காயமடைந்த நிலையில் பல கட்டமாக நடைபெற்று வரும் #RAPO19 படத்தின் படப்பிடிப்பில் தற்போது நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.