கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 9 வருட தனது தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொண்டுள்ளார் கேப்டன் தோனி.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன் படி, களமிறங்கிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது அசத்தியது.

அதாவது, கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது மிக கடுமையான விமர்சனங்கள் பாய்ந்த நிலையில், இந்த முறை அதீத சக்தியுடன் சென்னை அணி வீறு கொண்டு எழுந்தது, 

அப்படி, கடந்த முறை ப்ளே அப் சுற்றுக்கூட செல்லாமல் வலிமையோடு எழுந்து திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை இறுதிப் போட்டியில் கர்ஜித்தது.

“அப்படி என்னதான் மேஜிக் செய்தார் தோனி?” என்கிற கேள்வி தான் அனைவருக்குள்ளும் எழுந்தது.

போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ் ஜோடி மிக சிறப்பான தொடக்கத்தை கொடத்தனர்.

அதன்படி, 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாசி அவுட்டானர் ருதுராஜ். இதன் பின்னர் வந்த உத்தப்பா, அதிரடியாக மிரட்டி 31 ரன்கள் குவித்து அவுட்டானார். பின்னர் வந்த மொயீன் அலி ஆகியோர் 37 ரன்களை மிக வேகமாக அடிக்க, அதே நேரத்தில் மறு முணையில் தனி ஆளாக நின்று ஆட்டம் காட்டி வந்தா டூப்ளசிஸ், கொல்கத்தா அணி பந்து வீச்சை சிதறடித்துக்கொண்டிருந்தார்.

போட்டியின் கடைசி பந்து வரை நிலைத்து நின்று விளையாடிய அவர், கடைசி பந்தில் அவுட்டானாலும், மொத்த 86 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் முடிவில் சென்னை அணி 192 ரன்கள் குவித்தது.

பின்னர், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களம் கண்டது.

அதன் படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான தொடக்கம் தந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்களும், சுப்மன் கில் 43 பந்துகளில் 51 ரன்களும் விளாசி அவுட்டானார்கள். இதனால் முதல் விக்கெட்டிற்கு கொல்கத்தா அணி 91 ரன்கள் சேர்த்தது. 

ஆனால், அந்த சிறப்பான தொடக்கத்தை அந்த அணியின் மற்ற வீரர்கள் கடைப்பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் தான், அது வரை கொல்காத்தாவின் பக்கம் இருந்து ஆட்டம் அதன் பிறகு, சென்னை அணியின் பக்கம் மெல்ல மெல்ல திரும்பினார் கேப்டன் தோனி. 

90 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த கொல்கத்தா அணி 125 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளினார் கூல் கேப்டன் தோனி. 

இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 4 வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்று வெற்றி வாகை சூடியது. 

இந்த வெற்றியின் மூலமாக, கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொல்கத்தாவுக்கு எதிராக தோற்றமைக்கு கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி பதிலடி கொடுத்து உள்ளார். 

தற்போது வெற்றி கோப்பை வென்று கர்ஜித்த சிங்கங்களை சென்னை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.