அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல மரியாதை பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரை நெஞ்சிலேந்தியே அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன் முதல்வர் ஸ்டாலின்

அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல மரியாதை பெரியார்  அண்ணா கலைஞர் ஆகியோரை நெஞ்சிலேந்தியே  அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன்  முதல்வர் ஸ்டாலின் - Daily news

விளிம்புநிலை மக்கள் அனைவரையும் காப்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை பணி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார் 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும் அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் ஊடகத்தில் ,அண்மையில் வேதனையுடன் தெரிவித்திதார். அவர் பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது இதனை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில் மபழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு. பின்னர், அவர்களுக்கு தீபஒளித் திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். பின்னர் அஸ்வினி என்ற பெண்ணை அழைத்து உங்கள் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என கேட்டார்.

aswiniஅஸ்வினி  கூறியதாவது  எங்கள் பகுதியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் என மொத்தம் 81 குடும்பங்கள் 25 ஆண்டுகளாக மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் இல்லை. சாலை வசதியோ, குடிநீர் வசதியோ மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும்  இல்லாமல் வசித்து வருகிறோம் என்று  அமைச்சரிடம் வருத்தத்துடன்  பல்வேறு கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து  மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைநேற்று  காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நரிக்குறவர் பகுதியை பார்வையிட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் இருளர் இன மக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே! ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார் 

இதனை தொடர்ந்து அவ்விழாவில் பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கி இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது என்றும் தெரிவித்தார்.
 

Leave a Comment