தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனியாக போட்டியிடுவதையே கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அருள்புரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தேமுதிகவில் இணையும் விழா நடைபெற்றது.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’ நாங்கள் இன்றுவரை  அதிமுக கூட்டணியில்தான் நீடித்து வருகிறோம். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு பின்பு, இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். இப்போது ஒருதலைபட்சமாக நான் கூற முடியாது. எப்போதும் தேமுதிக முரசு சின்னத்தில் தான் போட்டியிடும்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாக பேசியிருந்தால் அதை நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டும்.  


தேமுதிகவில் இருந்து வெளியேறிச் செல்பவர்கள் குப்பைகள். தேமுதிகவில் குப்பைகளை சுத்தம் செய்து தரும் பிற கட்சிகளுக்கு நன்றி. ”  என்று கூறியுள்ளார்.