பழிப்போடும் அரசியலையும் பழிவாங்கும் அரசியலையும் செய்யமாட்டோம் - கமல்
By Abinaya | Galatta | Dec 23, 2020, 05:24 pm

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் சட்டமன்ற பரப்புரையை மேற்க்கொண்டு வரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தின் போது , ‘’ மக்கள் நீதி மய்யம் பழிப்போடும் அரசியலையும் பழிவாங்கும் அரசியலையும் செய்யாது. பணக்கார்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் அரசியலுக்கு வந்து பணக்கார்கள் ஆகி மக்களை ஏழையாக்குவது தான் தவறு. எதிரியாக நினைப்போருக்கு எதிரி அல்ல, குற்றங்களுக்கே எதிரி’ என்று தெரிவித்து இருக்கிறார்.
முன்னர், ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் மாறி மாறி தன் ஊழல் குற்றச்சாட்டு விமர்சித்துக்கொண்டு , என் வேலையை எளிதாகி விட்டனர் என்றார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘’இதுவரை ஓட்டுக்களை ‘வாங்க’ வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள். செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது” என்று பதிவு செய்துள்ளார்.