தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில், கோவை மாவட்டத்தில்  'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது. இதில் பாஜகவின் கலாச்சார பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்துக்கொண்டார்.


இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், ‘’ திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. திராவிட கட்சிகள் பெண்களின் உரிமை காப்பாற்றுகிறோம் என வேஷம் போடுகிறார்கள். ஆனால் கேரளாவில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறது. கேரளாவைப் பார்த்து தமிழகம் பெண் உரிமைகளை கற்றுக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.