தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்தது,கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

தொடங்கியது முதல் தொடர் சண்டைகள் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.ரியோ,ரம்யா பாண்டியன்,சோம் சேகர்,ஆரி,பாலா ஆகியோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த தொடரின் பைனல் நாளை ஒளிபரப்பாகவுள்ளது,இந்த தொடரில் சமீபத்தில் கேப்ரியெல்லா கொடுக்கப்பட்ட பணத்துடன் வெளியேறினார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு முதல் வீடீயோவை அவர் வெளியிட்டுள்ளார்,அதில் தான் திடிரென்று வெளியேறியது ஏன் உள்ளிட்ட சில கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by G ✨ (@gabriellacharlton_)