தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,  அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த அனைவருக்கும் ஒரேநாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு , முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: 
* முதல்வர் பழனிசாமி(எடப்பாடி)
* துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்(போடிநாயக்கனூர்)
* டி.ஜெயக்குமார்(ராயபுரம்)
* சி.வி.சண்முகம்(விழுப்புரம்)
* எஸ்.தேன்மொழி(நிலக்கோட்டை)
* எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்)


மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது அதிமுக. தொகுதி பங்கீடு உறுதியான உடனேயே தேர்தல் அறிக்கையை வெளியிட தயாராக வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம்,கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பல சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அதிமுக தரப்பினர் கூறுகிறார்கள்.