ஸ்கின் ஃபாஸ்டிங் எனும் சருமப் பராமரிப்பு முறை தான் இப்போது ட்ரெண்ட். சில மணி நேரம் சாப்பிடமால் இருப்பதை விரதம் என்போம். அதே போல் தான் எந்த காஸ்மெடிக் பூச்சும் இல்லாமல் இருப்பது தான் ஸ்கின் ஃபாஸ்டிங். சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரை கூட இந்த சரும விரதம் இருக்கலாம். 


நம்ம சரும ஆரோக்கியத்தை குறித்து இன்று யாரும் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் சருமம் அழகாக இருக்க வேண்டும் என்று மட்டும் விரும்புகிறார்கள், மெனக்கெடுக்கிறார்கள். ஆரோக்கியம் இல்லாமல் அழகு மட்டும் எப்படி வரும்? ஆண், பெண் இருவரும் இந்த தவறை செய்கிறார்கள். 


எந்நாளும் மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்ற ஸ்கின்கேர் பொருள்களைப் பயன்படுத்துறவங்கன்னு சருமத்துல அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க அவசியம் இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் செய்ய வேண்டும்.


நிபுணரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளாமல் கண்ணில் படும் புராடக்ட்டுகளை எல்லாம் பயன்படுத்துவதால்,  சருமம் தன் இயற்கையான தன்மையை இழந்துடும். மேலும் சருமத்தின் இம்யூனிட்டியும் குறைஞ்சிடும்.  குறைந்தது ஒரு வாரத்துக்கு எந்த காஸ்மெட்டிக் அயிட்டத்தையும் பயன்படுத்தாம இருக்கும்போது, சருமத்தின் ப்ளஸ், மைன்ஸ் மற்றும் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கலாம். 


ஓய்வு நேரங்களில், சருமத் துவாரங்களை அடைக்கும் விதமா சருமத்தில் காஸ்மெட்டிக், ஸ்கின் கேர் புராடக்ட் எதையும் பயன்படுத்தாம, சருமத்தை அப்படியே விடணும். தினமும் குளிக்கிறது, முகம் கழுவுறதைத் தவிர வேற எந்த ஸ்கின் கேர் புராடக்ட்ஸையும் பயன்படுத்தாம சருமத்தை அப்படியே விடலாம்.  இது தான் ஸ்கின் ஃபாஸ்டிங்.