அழகிப் பட்டம் வென்றதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ராணுவ வீராங்கனை!

அழகிப் பட்டம் வென்றதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ராணுவ வீராங்கனை! - Daily news

அழகிப் பட்டம் வென்றதால் வேலையில் இருந்து ராணுவ வீராங்கனை ஒருவர் நீக்கப்பட்டுள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ரஷ்யா நாட்டில் தான், ராணுவ வீராங்கனை ஒருவர் அழகிப் பட்டம் வென்றதால் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த 32 வயதான அன்னா க்ரம்சோவா என்ற இளம் பெண், அந்நாட்டு ராணுவத்தில் வீராங்கனையாக பணியாற்றி வந்தவர். இவருக்கு திருமணம் ஆன நிலையில், தற்போது குழந்தை ஒன்று உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவிலும், உலக அளவிலும் பெண்களுக்கிடையே அழகிப் போட்டி நடைபெறுவது போல, ரஷ்யா நாட்டின் ராணுவத்தில் 'National Guard Beauty pageant' என்ற தேசிய பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று, அந்நாட்டில் பிரத்தியேகமான முறையில் நடைபெறுவது வழக்கம்.

அதன் படி, அங்கு நடைபெற்ற அந்த அழகிப் போட்டியில், ராணுவ வீராங்கனையான 32 வயதான அன்னா க்ரம்சோவா என்ற இளம் பெண் கலந்துகொண்டார். இதில், அந்த பெண் அழகிப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அந்த இளம் பெண்ணின் இந்த வெற்றி, சக வீராங்கனைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. 

மேலும், அந்த போட்டியின் போது, ராணுவ வீராங்கனையான இளம் பெண், பிக்னி உடைகள் உடுத்தி கொண்டு, கட்டு மஸ்தான உடலோடு இருப்பது தான் தனக்கு பிடிக்கும் என்று, அவர் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். 

இதனால், அந்த வீடியோ அந்நாட்டில் வைரலானது. ஏற்கெனவே, அழகி போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் அவர் மீது பொறாமையாக இருந்தவர்கள், இந்த வீடியோ ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அந்த வீடியோவை பயன்படுத்தியே, அவருடன் பணியாற்றும் சக வீராங்கனைகள் செய்த சதி செயலால், அந்த இளம் பெண் தற்போது ராணுவ பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். 

இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட அன்னா க்ரம்சோவா, “நான் ராணுவத்தில் அழகிப் பட்டம் வென்றது பலருக்கு பிடிக்கவில்லை. என் மீது கொண்ட பொறாமையால் அவர்கள் இவ்வாறு செய்து விட்டனர்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். இதனால், இந்த கருத்தும், அந்நாட்டின் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், ராணுவ வீராங்கனை அன்னா க்ரம்சோவாவின் பிக்னி உடைகள் உடுத்தி கொண்டு இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விசயம், அந்நாட்டின் ஊடகங்களில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ரஷிய தயாரித்த எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்குவதற்காகத் துருக்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளது. அத்துடன், ரஷியா உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்குவது குறித்து இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment