உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், வேற எதுவும் செய்யவேண்டாம் இந்த ஒரு டிரிங் மட்டும் குடித்தால் போதும், ஒரு நாளில் 2 கிலோ எடை குறையும்.. ஒரு வாரத்தில் 10 கிலோ வரை எடை குறையும்.. என  பல வித காணெளியைப் பார்த்து இருப்போம். அந்த வகையில் ஆப்பிள் சைடர் வினிகர் குறித்து பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடைக்கிறது. அவ்வாறு ஆப்பிள் சைடர் வினிகர் ( Apple cider vinegar) மட்டும் குடித்தால் உண்மையில் உடல் எடை குறைக்கிறதா அல்லது வெறும் மார்க்கெட்டிங்காக மட்டும் தானா என்ற சந்தேகம் பலர் மத்தியில் இருக்கிறது. 


ஆப்பிள் சைடர் வினிகர் என்பது  பெர்மெண்டேசன் செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸிலிருந்து தயாரிக்கப்படுவது. அதாவது ஆப்பிள் ஜுஸில் ஈஸ்ட், பாக்டீரியா போன்றவகளை சேர்க்கப்பட்ட பின்பு அதில் அசிடிக் அமிலம் உருவாகிறது. இதன் மூலம் பெர்மெண்டேசன் நடக்கிறது. பின்பு அது வினிகராக நமக்கு கிடைக்கிறது. 


மேலும், இந்த வினிகர் உணவு பொருட்கள் கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுகிறார்கள். இதை ஏன் நாம் நேரடியாக எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மையும், இரத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. 


ஆனால் இதை ஒரு நாளைக்கு ரெண்டு டேபிள் ஸ்பூனுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது. காரணம் , இந்த வினிகரில் அமில தன்மை அதிகமாக இருப்பதால், நமது பற்களில் இருக்கும் எனாமல் பாதிப்பதோடு, குடல் அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. 


உடல் எடை குறையுமா? 


ஆப்பிள் சைடர் வினிகர் மட்டும் ஒரு நாளைக்கு சில வேலைகள் தொடர்ந்து அருந்தி வந்தேன்; அதனால் சில கிலோ வரை எடை குறைந்தது என்று யாராவது சொன்னால்.. அது பொய் !
காரணம், ஆப்பிள் சைடர் வினிகர் மட்டும் குடித்தால் கண்டிப்பாக உடல் எடை குறையாது. இந்த வினிகரில் அதிகமான தண்ணீர் இருப்பதால், கலோரிகள் குறைவாக இருக்கிறது. 


கலோரிகள் குறைவாக இருக்கும் ஒரு எந்த உணவும் , உடல் எடை குறைப்பு உணவுடனே தொடர்ப்புப்படுத்தப் படுகிறது. இந்த ஆப்பிள் சைடர் வினிகரில் மெக்னிசியம் , பொட்டாசியம் போன்ற நியூட்ரிசன் இருப்பதாலும் , கலோரிகள் குறைவு என்பதாலும் டயடில் சேர்த்துக்கொள்ளலாம். 


கெட்ட கொழுப்புகள் மற்றும் கிருமிகள் உடலில் தங்காமல் தடுக்க உதவும். இதன் கூடவே முறையான உடற்பயிற்சி, சரியான டயட் பின்பற்றும் போது மட்டும் தான் உடல் எடை குறைவது சாத்தியம்.