சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சங்கீதா VJ.இவர் சன் மியூஸிக்கில் இருக்கும்போதே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.செந்தமிழ் பெண்ணே,பிராங்கா சொல்லட்டா,லேடீஸ் சாய்ஸ் என்று தொடர்ந்து இவர் தொகுத்து வழங்கிய பல ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்தன.

இதனை தொடர்ந்து சன் டிவியின் அழகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சங்கீதா.பூர்ணா என்ற முக்கிய வில்லி வேடத்தில் நடித்த இவர் இவரது நடிப்புக்காகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்தார்.சன் டிவியில் கடந்த சில வருடங்களாக அசத்தி வந்த முக்கிய சீரியல்களில் ஒன்று அழகு.

இந்த சீரியல் கடந்த 2017 முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது ஸ்ருதி ராஜ்,ரேவதி,சங்கீதா என்ற பல நட்சத்திரங்கள் முன்னணி வேடத்தில் நடித்து வந்தனர்.ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து இந்த தொடரின் ஒளிபரப்பு சில காரணங்களால் கைவிடப்பட்டது.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

விரைவில் வேறொரு தொடருடன் சந்திப்பதாக அந்த தொடரில் நடித்து வந்த முக்கிய நட்சத்திரங்கள் தெரிவித்திருந்தனர்.தற்போது இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான சங்கீதா மீண்டும் சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது எந்த சீரியல் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் தெரிவித்துளளார்.

A post shared by Sangeetha23 (@sangeetha_offl)