குடும்பத்திற்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில், மனைவியை சாமியாரிடம் அழைத்துச் சென்ற கணவர் குடும்பத்தினர், அவரை நிர்வாணமாக்கி சாம்பல் பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதிநவீனமாக வளர்ச்சியடைந்த இந்த இந்திய சமூகத்தில் ஆண் குழந்தையின் மோகம், இன்றளவும் இருக்கவே செய்கிறது. இந்த ஆண் குழந்தை மோகத்தால், வட மாநிலங்களில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் தொடர் கதையாகவே நீடிக்கவும் செய்கின்றன.

அதன் படி, மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவருக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்து உள்ளது.

ஆனால், பெண் குழந்தை பிறந்த ஆசையில், அந்த கணவன் மற்றும் அந்த பெண்ணின் மாமியாருக்கு ஆண் வாரிசு ஆசை வந்திருக்கிறது. ஆனாலும், கடந்த 4 ஆண்டுகளாக அவர் கரு தரிக்கவே இல்லை. 

இதனால், சற்று அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த கணவனும், அந்த பெண்ணின் மாமியாருக்கும், இந்த பெண்ணை கொடுமை படுத்த தொடங்கி உள்ளனர். பல ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து அந்த பெண் கடும் சித்ரவதை செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் குழந்தை பிறக்காததால், அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவரிடம், அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் சேர்ந்து அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கே, இந்த பெண்ணை பார்த்த அந்த சாமியார், “இந்த பெண்ணிற்குச் சாம்பலை சாப்பிட வைத்து, சாம்பல் பூஜை செய்தால், குழந்தை பிறக்கும்” என்று, கூறியிருக்கிறார்.

அதன் படியே, அந்த பெண்ணை அந்த சாமியார் முன்பாக அமர வைத்த, முதலில் கொஞ்சம் சாம்பலை வீட்டுக்கு கொடுத்து அனுப்பி, அதன் பிறகு அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, சாம்பலையும், குங்குமத்தையும் உடம் முழுக்க பூசி, பூஜை நடத்தியிருக்கிறார்கள்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், எதுவும் செய்ய முடியாமல் இருந்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணிடம் வரதட்டனை கேட்டு சில மாதங்கள் அவரின் அம்மா வீட்டுக்கு விரட்டியடித்து விட்டு, ஆண் குழந்தை இல்லை என்பதற்காகவே, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை, 2 வதாக ரகசிய திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

இது குறித்து உண்மை தெரிய வந்ததும், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவனையும், அவரது மாமியாரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.