மனைவி மீது சந்திக்கப்பட்ட கணவன், அவரின் அந்தரங்க உறுப்பை ஊசியால் வைத்த சம்பவம், நெஞ்சைப் பதை பதைக்க வைத்து உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் வட மாநிலங்களில் தான், இந்த முறையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கோர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள மடா என்னும் கிராமத்தில் 55 வயதான கணவன், தன்னுடைய 35 வயதான மனைவி உடன் வசித்து வருகிறார்.

கணவன் - மனைவி இடையே கிட்டதட்ட 20 வயது வித்தியாசங்கள் உள்ள நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், தனது மனைவி மீது அந்த கணவன் எப்போதும் சந்தேகம் பட்டுக்கொண்டே இருந்து உள்ளார். 

அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆணோடு தனது மனைவி தனது மனைவி கள்ளக் உறவில் இருந்து வருவதாக, அந்த கணவன் சந்தேகம் அடைந்து உள்ளார்.

இதன் காரணமாக, தனது மனைவியிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டு, அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அப்போது, அவரின் மனைவி தனது கணவரிடம், “நான் அப்படி எந்த தவறும் செய்ய வில்லை” என்று, புரிய வைக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார். ஆனாலும், அதனை நம்ப அந்த கணவன் தயாராக இல்லை. 

இதனால், தனது மனைவியைத் துளி அளவும் நம்பாமல் அவரை சந்தேகப்பட்டு அடித்து உதைத்திருக்கிறார். அப்போது தான், இந்த உச்சக்கட்ட கொடூர சம்பவத்தையும் அவர் அரங்கேற்றி இருக்கிறது.

கணவனின் அடி தாங்க முடியாமல், அவரது மனைவியும் எதிர்த்து சண்டை போட்டிருக்கிறார் இதனால், கணவன் - மனைவி இடையேயான சண்டை அதிகமாகியிருக்கிறது. 

இதில், கடும் கோபம் அடைந்த அந்த கணவன், ஒரு உலோக ஊசியை எடுத்து, தனது மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்துள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அவரது மனைவி அலறி துடி துடித்து கத்தியிருக்கிறார்.

இதனையடுத்து, தனது மனைவியை வீட்டில் உள்ள ஒரு ரூமில் வைத்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு, அவரது மனைவி அந்த வீட்டிலிருந்து தப்பித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று, தனது கணவன் கொடுமைகளைப் பற்றி புகார் கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த கணவன் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடி வருகின்றனர்.

மேலும், கணவனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அந்த பெண்ணிற்கு அங்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.