திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காதலனின் நிச்சயதார்த்த விழாவில், காதலி அடியாட்களுடன் வந்து கலாட்டா செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்தார். 

இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதனால், அவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடிகளாக சிறிது காலம் வந்தனர்.

இப்படியே, சில ஆண்டுகள் இவர்களது காதல் தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண்ணிடம், “திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்” கூறி, அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை அந்த காதலன் கழட்டி விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த இளம் பெண் பல முறை விளக்கம் கேட்டும், அவர் எந்த வித பதிலும் சரிவர சொல்லவில்லை என்றும் தெரிகிறது. இதனால், அந்த இளம் பெண் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

மேலும், அந்த காதலனுக்கு ஒரு பணக்கார வீட்டு சம்பந்தம் வந்திருக்கிறது. இதனையடுத்து, அந்த இளைஞருக்கும், அந்த பணக்கார பெண்ணிற்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெரியவர்களால் முடிவு செய்த, திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப்பட்டன. 

அதன் படி, அந்த இளைஞனின் திருமண நிச்சயதார்த்த விழா, அங்குள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் மற்றும் மணமகள் இரு வீட்டார் உறவினர்கள் ஆகியோர்கள் புடை சூழ சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. 

அப்போது, அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த காதலி அந்த மணமகனின் முன்னால் வந்து நின்றுள்ளார். அத்துடன், தன்னுடன் சில பவுன்ஸர்களையும் அழைத்துக்கொண்டு அவர் வந்திருந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அனைவரும் அந்த பெண்ணிடம் வந்து விசாரித்து உள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்களிடம், “இந்த மாப்பிள்ளை என்னை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, என்னை ஏமாற்றி விட்டதாக” பகிரங்மாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், அந்த திருமண நிச்சயதார்த்த விழாவினை அப்படியே நிறுத்தி விட்டனர்.

இது தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டன. அதன் படி, இரு விட்டாரும் அங்குள்ள காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அந்த இளைஞனின் குடும்பத்தினர் “அந்த பெண் கூறிய அனைத்தும் பொய் என்றும், அந்த பெண் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்றும், எங்கள் குடும்பத்தினர் அந்த பெண்ணுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வில்லை” என்றும், கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக, “என் மகனை அந்த பெண் ஒருதலைபட்சமாக விரும்புகிறார் என்றும், அதன் காரணமாக எங்கள் மகனை அவர் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளத் திட்டம் போட்டு இந்த நாடகத்தை நடத்துகிறார்” என்றும், எதிர் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.