கோயிலுக்குள் வைத்தே கணவரை தாக்கி, அவரது மனைவியின் சேலையை உருவி 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகாவில் உள்ள அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 28 வயதான புட்டய்யா மற்றும் அவரது மனைவியான 24 வயதான அமுதா (இருவருடைய பெயரும் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த 16 ஆம் தேதி அங்குள்ள அந்தரகட்டே பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று உள்ளனர். 

அப்போது, அந்த கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் கணவன் - மனைவி இருவரும் அந்த கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தனர். 

இருவரும் கண்களை மூடி சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்த நேரம் பார்த்து, அந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போடவே, அவரது கணவர் அந்த நபர்களிடம் சண்டைக்கு சென்று உள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த கும்பல், அந்த பெண்ணன் கணவனைத் தக்கிவிட்டு, கோவிலுக்குள் வைத்தே அவரது மனைவியின் சேலையை உருவி, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். இந்த தாக்குதலில், அவர் பலத்த காயம் அடைந்தார். 

இதனால், அந்த பெண் பயத்தில் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார். இதனால், அந்த பகுதியில் அக்கம் பக்கத்தினர் திரண்டு கோயிலுக்குள் வந்து உள்ளனர்.

பொது மக்கள் அங்கு அதிகம் பேர் வருவதைப் பார்த்த அந்த 6 பேரும், அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட கணவனும் - மனைவியும் அந்த பகுதி மக்களால் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த நபரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ், 24 வயதான மனு, 26 வயதான சிவக்குமார், 28 வயதான சந்தோஷ், 29 வயதான சசிகுமார் என்பது தெரிய வந்தது. 

அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், கைதான 5 பேரிடமும் வாக்குமூலம் பெற்ற போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.