இளம் பெண்ணை ஏமாற்றி கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மகன் ஒரு பக்கமும், அந்த இளம் பெண்ணான மருமகளை அடையத்துடிக்கும் மாமனார் இன்னொரு பக்கமும் தொந்தரவு செய்து வருவதாக இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தலைநகர் டெல்லியே, விவசாயிகள் பிரச்சனையால் தற்போது முடங்கிப்போய் உள்ளது. அப்படியான பிரச்சனைகளுக்கு மத்தியில், இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் நிகழ்ந்துள்ளது தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி சரிதா விஹார் காவல் நிலையத்தில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் மீது ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த இளம் பெண் அளித்த புகாரில், “எனது வீட்டில் இளைஞர் ஒருவர் குடியிருந்து வந்தார்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அந்த நபர், தனது பெயரை ராகுல் எனக் கூறி என்னிடம் பழகி வந்தார் என்றும், இதை உண்மை என்று நம்பி நானும் அவரிடம் பழகினேன் என்றும், இதனால் நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அடிக்கடி தனிமையில் சந்தித்து உடல் ரீதியான உறவில் இருந்தோம்” என்றும், கூறியுள்ளார். 

“ இப்படியாக, நாங்கள் அடிக்கடி உடல் ரீதியிலான தொடர்பு வைத்துக்கொண்டோம் என்றும், ஆனால் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்” என்றும், தெரிவித்துள்ளார்.

“அப்படி நடைபெற்ற திருமணத்தின்போது தான், அவர் பெயர் ராகுல் இல்லை என்றும், அவரின் உண்மையான பெயர் சாஹிப் அலி என்றும், அவருக்கு வெறும் 20 வயது மட்டுமே ஆகிறது என்பதும், எனக்கு தெரிய வந்தது” என்றும், அந்த பெண் அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனாலும், திருமணம் ஆனதை காரணமாக காட்டி, அந்த நபர் என்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, அந்த இளைஞனின் தந்தை ஹசிஸ்யுன்னலாவும், என்னிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் வன்புணர்வு செய்யத் தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார்” என்றும், அந்த இளம் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால், அவர்களுடன் அங்கே என்னால் வாழ முடியவில்லை என்றும், இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த இளம் பெண் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சாஹிப் அலி என்ற ராகுல் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 இன் படி பாலியல் வன்புணர்வு, சட்டப் பிரிவு 366 இன் படி ஆள் கடத்தல், கட்டாய கல்யாணம், சட்டப் பிரிவு 354 இன் படி பெண் மீது தாக்குதல், குற்றச்சதி, சட்டப் பிரிவு 406 இன் படி நம்பிக்கை மீறல் மற்றும் பொதுவான குற்ற நோக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.