கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தவும் திரையரங்குகள் திறக்கவும் மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு நடத்தவும், அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நாடு முழுவதும் நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் குறைந்த பட்ச ஊழியர்களுடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் எச்சில் துப்பக்கூடாது என்றும் கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து நாளை முதல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மேலும் சில நெறிமுறைகள் பின்வருமாறு...

* படப்பிடிப்பின் போது, கேமராவுக்கு முன் உள்ள நடிகர் - நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். உடை உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் உபகரணங்களை கையாளும், கலைஞர்கள் கட்டாயம் கை உரை அணியவேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வெளிப்புற படப்பிடிப்புகள் நடைபெறும் போது... கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், 6 அடி தூரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி நடிக்க வேண்டும். கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடிக்கடி கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

*படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.

*படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

*உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.

 *படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

*குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

*வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கொரோனா தடுப்பு குறித்த செய்திகள் அடங்கிய போஸ்டர்கள், கட்டாயம் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும்

* குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை படப்பிடிப்பு தளம் சுத்தப்படுத்த வேண்டும்

* கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியவரும் நபர்களை கட்டாயம் தனித்திருக்க சொல்லி, விடுப்பு அளிக்கப்பட வேண்டும்

* படப்பிடிப்பை காண்பதற்கு பார்வையாளர்கள் வரக்கூடாது

தற்போது, இந்த நெறிமுறைகள் யாவும் மத்திய அரசு சார்பில் திரைப்பட படப்பிடிப்பு குறித்து வழிகாட்டுதல் வெளியிட்டாலும், இதனை அந்தந்த மாநில அரசுகள் தான் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.