உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொடூரத்தின் உச்சமாக சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் ஊற்றி வெறித்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

பதோஹி மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்தில், கடந்த 17 ஆம் தேதி அன்று, மாடு மேய்க்கச் செல்வதாக வீட்டில் கூறி விட்டு அந்த சிறுமி சென்றுள்ளார். ஆனால், மாலை இரவு அவர் வீடு திரும்பவில்லை. சிறுமி திடீரென்று மாயமாகி உள்ளார். இதனையடுத்து, சிறுமியைக் காண வில்லை என்று, சிறுமியின் பெற்றோர் அந்த ஊர் முழுவதும் தேடி உள்ளனர். 

இதனையடுத்து, சிறுமியின் உறவினர்களும், அந்த ஊரின் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், சிறுமி எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள அடர்ந்த மரங்கள் உள்ள ஒரு பகுதியில் காணாமல் போன சிறுமியின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலைப் பார்த்து உள்ளனர். அப்போது, கொடூரத்தின் மிக உச்சமாக மிகவும் அரக்கத் தனமாக சிறுமியின் முகத்தில் சில தீக்காயங்கள் இருப்பு தெரிய வந்தது. இதனால், சிறுமியின் முகத்தில் மீது யாரோ ஆசிட் ஊற்றி இருக்கலாம் என்று, அந்த கிராமப் பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சிறுமியின் உடலில் சில பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளன. அதன் பிறகு, சிறுமியை சிலர் படுகொலை செய்து, இந்த பகுதியில் தூக்கி வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமி எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவித்து கொலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு உறுதியாக வர முடியும் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமான விசாரணை தொடங்கி உள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தனது மகளின் மரணத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலரைச் சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாகக் காவல் துறையிலும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர்களிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொடூரத்தின் உச்சமாகச் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் ஊற்றி வெறித்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும், 4 சிறுமிகள் இது போன்று கொடூரமாக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது, அந்த மாநில மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.