“சிறையில் ஒருநாள் கைதியாக வாழும் திட்டம்” விரைவில் அமல்படுத்தப்பட்ட உள்ளது, இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பொதுவான பேச்சு ஒன்று உண்டு. அது, “ பொதுவாகவே, சிறைச்சாலை என்றால், கலி தான் சாப்பாடு என்ற பழைய வசனங்கள் மறைந்து, சிறையில் இருப்பவர்களுக்குத் தினமும் 3 மணி நேரமும் சூப்பரான சாப்பாடு வழங்கப்படுகிறது என்றும், மாதம் மாதம் அல்லது திருவிழாக்களின் போது சினிமாவும் திரையிடப்படுவதாக” பொதுவான ஒரு பேச்சு வழக்கு கிராமங்களில் பேசப்படுவது உண்டு.

இப்படியான கிசுகிசுகள் பல நேரங்களில் உண்மையாக இருக்குமோ என்றும் நம்பும் மனம் தளர்ந்த மனிதர்கள் பலரும், “நாம், வெளியில் இருப்பதை விட, எதாவது ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, பேசாமல் சிறையிலேயே பொழுது போக்கலாம்” என்று, கிராமங்கள் தோறும் பலரும் பல விதங்களில் பேசுவது உண்டு.

இந்த நிலையில் தான், “கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் 500 ரூபாய் கொடுத்தால், ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் புதிதாக அங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக” செய்திகள் வெளியாகி உள்ளன. 

அதாவது “முதல்வன்” படத்தில் நடிகர் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக நடித்தது போலவே, “ஒரு நாள் கைதியாக வாழ ஆசைப்படுபவர்கள்” இந்த சிறைக்கு சென்று வரலாம்” என்கிற செய்தி, தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டயை கிளப்பி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில், பெலகாவியில் ஹிண்டல்கா சிறைச்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் தான், விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இந்த சிறையில் தான் “500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அங்குள்ள உயர் அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர். 

இது தொடர்பாக அந்த சிறையின் உயர் அதிகாரிகள் பேசும் போது, “சிறையில் வாழ விரும்புபவர்களுக்காக 500 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறையில் கைதியாகத் தங்கும் திட்டத்தை நாங்கள் அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இதற்காக அரசின் அனுமதியை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும், இங்கு வருபவர்களுக்குக் கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும் என்றும், அப்படி வருபவர்கள் அனைவரும் கைதிகள் போலவே நடத்தப்படுவார்கள்” என்றும், அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “அப்படி 500 ரூபாய் பணம் கட்டி கைதியாக விரும்பி வருபவர்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படாது என்றும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டு இருப்பதாகவும்” அவர் விளக்கம் அளித்தார்.

“கைதிகள் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த திட்டம் இங்கு தொடங்கப்படுவதாகவும்” அந்த போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.