விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலக்ஷ்மி.ஒரு குடும்பத்தலைவியின் கதை என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது.சுசித்ரா ஷெட்டி இந்த தொடரின் முதன்மை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கு ஜோடியாக சதிஷ்குமார் நடித்துள்ளார்.

விஷால்,ரித்திகா,வேலு லக்ஷ்மணன்,திவ்யா கணேஷ்,நேஹா மேனன்,கம்பம் மீனா போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.இந்த தொடர் குறித்து கோபி கதாபாத்திரம் குறித்தும் மீம்களை பகிர்ந்தும் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்,நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்,ஒவ்வொருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இந்த தொடரின் மூலம் உருவாகியுள்ளனர்.இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஜெனிஃபர் சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வருகிறார்.

புதிய எபிசோடுகள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.இதனை சீரியல் குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.இதனை தொடரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.