“பழைய 1,486 சட்டங்கள் திரும்ப பெறப்படும்” நிர்மலா சீதாராமன் அதிரடி

“பழைய 1,486 சட்டங்கள் திரும்ப பெறப்படும்” நிர்மலா சீதாராமன் அதிரடி - Daily news

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் 1,486 பழைய சட்டங்கள் யாவும் முற்றிலுமாக திரும்ப பெறப்படும்” என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிரடியாக அறிவித்து உள்ளார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி,

- ரயில்வே, கனரக தொழில் உள்ளிட்ட 15 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு உள்ளார்.

- போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக 20,000 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

- தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

- குறிப்பாக, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று, அதிரடியாகவே நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

- சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் திருத்தப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

- தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

- நிதி சார்ந்த தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிப்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

- நடப்பு நிதியாண்டிலேயே டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும்.

- நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- அனைத்து கிராமங்களுக்கு இ சேவை வசதி கட்டாயம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும்.

- தொலைத்தொடர்பு மருத்துவ சேவை வசதி மேம்படுத்தப்படும்

- நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை வலுப்படுத்துவதே, இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்றும், அவர் தெரிவித்தார். 

- பார்வத்மாலா' திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

- வட மாநிலங்களில் உள்ள எல்லைப்புற கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

- எல்லைப்புற கிராமங்களில் சுற்றுலா, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளார்.

- சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும், அறிவிப்பு.

- உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

- அதன்படி, ராணுவ தளவாடங்கள் தேவையில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதிகள் குறைக்கப்படும்

- நகர்ப்புறங்களை மேம்படுத்தவும், திட்டங்களை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும்

- இன்னும் 25 ஆண்டுகளில் 50 சதவீத மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

- முக்கியமாக, நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு' திட்டம் ஊக்குவிக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில். உள் நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- எரி சக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

- 2030 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment