மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்த கணவன், மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து அவரை தொடர்ச்சியாக மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தன்னுடைய கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அங்குள்ள தேகு ரோடு காவல் நிலையத்தில் அளித்தார்.

அந்த புகாரில், “என் மீது சந்தேகப்படும் என் கணவர், என்னை தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வருகிறார் என்றும், உடல் ரீதியாக அவர் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்” என்றும், குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், “தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும், 'இன்னைக்கு யாருக்கூட பேசுன? யாருக்கூட நடந்து வந்த?' என்று, கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை அவர் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார் என்றும், அப்போது என் கணவரின் கேள்விக்கு நான் சரியாக பதில் அளிக்கவில்லை என்றால், உடனே என்னை அவர் அடித்து கொடுமைப்படுத்துவார்” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் காரணமாக, அந்த பெண்ணிடம் முறையாகப் புகாரை பெற்றுக்கொண்டு, அந்த தம்பதியைக் காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இது குறித்து அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பெண் காவலர்கள் ஒருவர், அந்த பெண்ணின் கணவருடைய செல்போனை வாங்கி ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த கணவனின் செல்போனில் அவரது மனைவி குளிக்கும் ஆபாசப் படம் வீடியோவாக இருந்து உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரிடம் “இது என்ன உன் மனைவி குழப்பத்தை நீயே வீடியோ எடுத்து வச்சிருக்க? என்று, கேள்வி மேல் கேள்வி கேட்டு தங்களது பாணியில் விசாரித்து உள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த அந்த கணவன், “என்னுடைய மனைவி பணிக்கு வேலைக்கு சென்று விட்டால், நான் அவரை ரொம்பவே மிஸ் செய்வேன். அதனால் தான், என் மனைவி குளிப்பதை என் செல்போனில் நான் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து, தங்களது பாணியில் விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், “ஊரடங்கு காரணமாக இவர் வேலை இழந்து உள்ளதும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் என்ன செய்வது என்று புரியாமல் தனது மனைவியை தினமும் டார்ச்சர் செய்து வந்தார் என்றும், ஆனால் அவர் வேலைக்கு சென்று வந்த போது அந்த நபர் இது போன்று தரம் தாழ்ந்து நடந்துகொள்ளவில்லை” என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

முக்கியமாக, “கடும் மன உளைச்சல் காரணமாக, தனது மனைவி குளிப்பதை அவருக்கேத் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து, அவரை தொடர்ந்து மிரட்டி டார்ச்சர் செய்து வந்தார்” என்பதையும் போலீசார் தெரிந்துகொண்டனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.