மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியை தக்கவைக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக உழைத்து வருகிறார். நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ‘’ நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடத்தில் எல்லாம் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்த சிலரை பாஜக அனுப்புவதை நான் கவனித்து வருகிறேன். மற்ற கட்சிகளின் பிரச்சாரத்துக்கு ஆள் அனுப்புவோம் என வெளிபடையாக மிரட்டல் விட்டு வருகிறார்கள். 


பாஜகவின் எண்ணம் மேற்கு வங்கத்தில் நடக்காது. பாஜக தலைவர்கள் தங்கள் வீட்டிற்கு வருவதாகவும் அவர்களுக்கு செலவு செய்ய நேர்கிறது என்றும் ஒரு தலித் குடும்பத்தினர் கூறுகிறார்கள். விளம்பரத்துக்காக பாஜகவினர் எளிய மக்களை இவ்வாறு தொந்தரவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாக்களிக்க யாராவது உங்களுக்கு பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.