ஈறுகளிலிருந்து பற்கள் வெளியே வரும் போது அசௌகர்யங்களை அனைவரும் உணருவோம். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். அரிதாக 2 அல்லது 3-வது மாதத்தில் கூட பற்கள் முளைக்கும் குழந்தைகள் உண்டு. பற்கள் வெளிவரும் போது ஈறுகளில் வீக்கம், ஜுரம், அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.


இதை குழந்தைகளால் சொல்ல முடியாது என்பதால் பற்கள் முளைக்கும் காலத்தில் அவ்வப்போது அழுவார்கள், சோர்ந்து காணப்படுவார்கள். வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கு. இதற்கு பயப்பட வேண்டியது இல்லை. கையில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தையும் வாயில்வைத்துக் கடிப்பார்கள்.  


பல்முளைக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை குழந்தைகளால் சொல்ல முடியாது. இதை குறைப்பதற்கு சில வழிகள் உண்டு.


பழங்களை அல்லது கேரட் போன்ற காய்கறிகளை Mesh Feederல் போட்டு கொடுக்கலாம்
தரமான Teething toy வாங்கிக்கொடுத்தால் ஈறுகளுக்கு சற்றுநேரம் இதம் தரும்.


அவ்வப்போது வாயில் இருந்து விழும் எச்சிலை சுத்தமான துணிவைத்து துடைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் ஈறுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.


கடித்து விளையாட இரும்பு, கண்ணாடி போன்ற பொருட்கள் கொடுக்க கூடாது. அதை கடிக்கும் போது குழந்தைகளின் ஈறுகள் சேதமடைய அதிக வாய்ப்பு உண்டு. 


சில குழந்தைகள் பொருட்களுக்கு பதிலாக துணி அல்லது மண்ணை அள்ளி சாப்பிடுவார்கள். சுத்தமான துணியாகவே இருந்தாலும் துணி திங்க விட கூடாது. காரணம் துணியில் அழுக்குகளோ, சோப்பு கலவையோ, தூசிகளோ, துணியில் இருக்கும் நூல்களோ எச்சிலுடன் சேர்த்து குழந்தையின் வயிற்றுக்குள் செல்ல நேரும். அதனால் குழந்தையை எந்நேரமும் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.