மந்திரவாதி ஒருவர், மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததை, கணவனே அதனை வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலின் குங்கா என்னும் பகுதியில் இருக்கும் ஷாஜபூர் பகுதியைச் சேர்ந்த கணவன் சரவணன் - மனைவி அமுதா (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், இது தொடர்பாக அவர்கள் சில மருத்துகளும் எடுத்து வந்தனர். 

ஆனாலும், பலன் அளிக்காத நிலையில், கணவன் சரவணன் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்று, “தனக்கு குழந்தை பிறக்காத” கவலையைக் கூறியிருக்கிறார்.

அதற்கு அவர் “சில பூஜைகளைச் செய்ய வேண்டும்” என்று, கூறியிருக்கிறார். 

அத்துடன், “இந்த பூஜையில் கலந்துகொள்ளக் கணவன் - மனைவியாக இருவரும் சேர்ந்து வர வேண்டும்” என்றும், கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, 21 வயதான அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியை ஷாஜபூரிலிருந்து போபாலுக்கு அந்த சூனியக்கார மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, அவரின் மனைவியின் அழகில் சபலப்பட்ட அந்த மந்திரவாதி, “இரவு நேரத்தில் உன் மனைவியை அழைத்து வா” என்று, கூறி உள்ளார்.

மேலும், அந்த பெண்ணின் கணவரிடம் “உன் மனைவியோடு நான் உறவு வைத்தால் அவரின் மலட்டுத் தன்மை நீங்கி, அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்” என்றும், அவர் கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்ட அந்த கணவன், இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

அதன் படி, இரவு ஆனதும் தனது மனைவியை அந்த மந்திரவாதியிடம் அழைத்துக்கொண்டு சென்று உள்ளார். அங்கு, அந்த பெண்ணோடு, அந்த மந்திரவாதி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அப்போது, அதிர்ச்சியின் உச்சக்கட்டமாக, தனது மனைவியை அந்த மந்திரவாதி பாலியல் பலாத்காரம் செய்ததை, அந்த பெண்ணின் கணவன் வீடியோ எடுத்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணால், தனது கணவனை எதிர்த்துப் பேச முடியாமல் அப்படியே இருந்து உள்ளார்.

இதனையடுத்து, மறுநாள் வீடு திரும்பிய அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய உறவுக்கார பெண்ணிடம் கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை கூட்டிக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் அந்த பெண்ணை, தங்களது வீட்டில் வைத்துப் பூட்டி உள்ளனர்.

மேலும், வழக்கு குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தி போலீசார், அந்த பெண்ணை அவரின் கணவர் வீட்டிலிருந்து மீட்டு, அந்த கணவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று இன்னும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.