12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியைப் பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பள்ளி மாணவன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால், அந்த மாணவி தற்போது 
குழந்தை பிறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த மாணவி, கடந்த 2019 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்தபோது, அந்த பகுதியில் உள்ள டியூசனுக்குச் சென்று படித்து வந்தார். அப்போது, அந்த டியூசனில் தன்னுடன் சேர்ந்து படித்த சக மாணவன் ஒருவனுடன், இந்த மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடர்ச்சியாகப் பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. 

இதனால், இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை மேலும் வளர்த்து வந்தனர். 

அப்படியான தருணங்களில், தங்களது வீட்டுக்குத் தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று அவர்கள் இருவரும் ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படியான தருணத்தில், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அந்த மாணவியை தொடர்பு கொண்ட அந்த மாணவன், “என்னால், உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும், நான் உடனே உன்னை பார்க்க வேண்டும்” என்றும், கூறி அடம் பிடித்திருக்கிறார்.

இதன் காரணமாக, தனது காதலனான அந்த மாணவனைப் பார்க்க, அந்த மாணவியைத் தனது வீட்டிற்குத் தெரியாமல், தனது வீட்டின் வெளியே வந்து நின்றுள்ளார்.

அப்போது, அங்கு அந்த பள்ளி மாணவன், அந்த மாணவியை அங்கிருந்து அழைத்துக் கொண்டு, அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்குள் சென்று உள்ளார்.

அங்கு, அந்த மாணவியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அந்த மாணவியிடம் “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, ஆசை வார்த்தை கூறி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இது போன்று அந்த மாணவியை, இந்த இடத்தில் அழைத்து வந்து தொடர்ச்சியாகப் பல முறை அந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அந்த மாணவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில், “எப்படியும் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வான்” என்று, அந்த பள்ளி மாணவி அதிக நம்பிக்கையில் இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், அந்த மாணவியின் உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாணவியும் கர்ப்பம் அடைந்திருக்கிறார். ஆனால், தனது காதலன் மேல் இருந்த நம்பிக்கையின் காரணமாக, தனக்கு நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த மாணவி, தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் அனைத்தையும் மறைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த மாணவி வீட்டில் இருந்த போது, அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்துள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு, அந்த பள்ளி மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், “மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து விடும்” என்று, கூறி உள்ளனர். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்கேயே மயங்கி உள்ளனர். அதே நேரத்தில், மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.