பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கோவிட்19 அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 


சிலதினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொது க் கூட்டத்தில் பங்கேற்க, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா காரில் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன.
டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாக முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி இருக்கிறார். அதனால் இந்த சம்பவத்தை நடத்தியது மம்தா பானர்ஜி தான் , என்று  ஜே.பி நட்டா தரப்பில் குற்றசாட்டப்பட்டது. 


இதற்கு பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதை இவ்வாறு பாஜக திசை திருப்புகிறது. அவர்களே தான் அவர்கள் கார் மீது கற்கள் வீசி உள்ளார்.  சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய படைகள் பாதுகாப்புக்கு இருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் பலருக்கும் மாநில அரசுக்கே தெரியாமல் மத்திய படை பாதுகாப்பு அளிக்கிறது. அதனால் வேறுயாரும் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்று “ மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.  


இந்நிலையில் ஜே.பி.நட்டா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவலை அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எனது பிரார்த்தனைகள் நட்டாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.