கடந்த ஆண்டை விட 12% அதிகமாக GST வரி வசூல் !
By Abinaya | Galatta | Jan 01, 2021, 07:13 pm

இந்தியா முழுவதும் ஒரே மாறியான வரியை அமல்படுத்தும் நோக்கில் 2017ல் புதிய சரக்கு மற்றும் சேவை வரியான , ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த வரி முறை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலையில், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ரூ.1,15,174 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உச்சம் கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% அதிகம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.1,13,866 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதே உச்சமாக இருந்தது. கொரோனா காலத்தில் 12% அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பது குறிப்பிட்டத்தக்கது.