மாநிலத்தில் கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக பசுமை எரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கோவா அமைந்துள்ளது.

கிராமப்புற மற்றும் விவசாய நுகர்வுக்கு பசுமை ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முதல் க திட்டம் ஒவ்வோரு மாநிலத்திலும் வர உள்ளது.

மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (ஈஇஎஸ்எல்) மற்றும் கோவா அரசு ஆகியவை மலிவு விலையில் சுத்தமான மின் திட்டத்தை வெளியிடுவது குறித்து விவாதிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று கையெழுத்திட்டன.

இந்த திட்டம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை துரிதப்படுத்தும் என்று நாட்டு மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மத்திய மாநில அமைச்சர் ஆர்.கே.சிங் கூறிய போது ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது "ஏதோவொரு வகையில்" ஒரு புதிய பச்சை புரட்சி". 

PM-KUSUM திட்டத்தின் கீழ் மையத்தின் அனைத்து ஆதரவையும் கொண்டு கோவாவில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றூ அம்மாநிலத்திடம்   கேட்டுக் கொண்டார்.

"இந்த முயற்சியால் கோவா ஒரு பசுமை மாநிலமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது," என்று அவர் கூறினார்.

 150 மெகாவாட் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது, 

மேலும் மாநிலம் முழுவதும் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் அமைக்கும்" என்று மின் அமைச்சர் நிலேஷ் கப்ரால் கூறினார்.