மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலுயுறுத்தி டெல்லியில் 29 -வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளி நாடுகளிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவு குரல்கள் வலுத்து வருகிறது. 


இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க பேரணியாக குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி சென்றனர் காங்கிரஸ் சென்றது. பேரணி தொடங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தலைமையாக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. 


இதனிடையே விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். 144 தடையை மீறிய பேரணி நடத்தியதற்காக , ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.