தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான  மழைக்கு வாய்ப்பு - Daily news

தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் சில இடங்களில் இன்று  மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது இன்று புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரையை 4-ம் தேதி காலை நெருங்கக் கூடும் என தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து 6-ம் தேதி நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார். இந்தநிலையில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து  இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்களில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், அதுதவிர பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாளை மறுதினம்  கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 9-ம் தேதி  கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் வங்க கடலில் நிலவிவந்த ஜாவத் புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்திருந்த நிலையில், அது மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment