தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்து வந்துக்கொண்டிருந்த நிலையில், காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை எழுந்து வந்தன. இந்நிலையில், நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன் திடீரென உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறைக் காவலர்கள். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து செல்வமுருகன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கபட்டது. 

இதனனத்தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து போராடினர். அவரது மனைவி பிரேமா, உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த பண்ருட்டி வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ், டிஎஸ்பி பாபு பிரசாத், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் மலா்விழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினா். அப்போது, செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா். இந்நிலையில் பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறாக போலீசார் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் இதே நிலை நீட்டிப்பதாக கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா அமைக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கானது, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்னர். ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளது.

பொறுத்தப்படும் சிசிடிவி காமிராக்களில் பதிவுசெய்யப்படும் காட்சிகளின் பதிவுகள், அடுத்த ஒரு வருடத்துக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இதுபோன்ற காவல்துறையினரின் எல்லைமீறல், அதனால் விசாரணை கைதிகள் பாதிக்கப்படும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள், நாடு முழுவதும் வலுத்து வருகின்றது.