ராஜஸ்தான் மாநிலத்தில் மரணிக்கும் காகங்கள்; 144 தடை உத்தரவு அமல்!
By Abinaya | Galatta | Jan 01, 2021, 03:06 pm

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஜலாவர் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ளது.
பறவைகளிடையே வேகமாக ஏ டைப் வைரஸ் பரவிக்கொண்டு இருக்கிறது. பறவைகள் மற்றும் இதர உயிரினங்களை கொல்லக்கூடிய அளவுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது. வேகமாக பரவ கூடிய இந்த வைரஸ் பறவைகள் தாண்டி மனிதர்களுக்கும் பரவுகிறது.
வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் சாம்பார் ஏரியில் பறவைக் காய்ச்சலின் காரணமாக மரணித்துக் கிடைக்கிறது. ஜோத்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் காகங்கள் இறந்துக்கொண்டு வருகிறது. ஜோத்பூருக்கும் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வெளிநாட்டில் இருந்து தான் வந்துக்கொண்டு இருக்கிறது. இறந்த காகங்களின் மாதிரிகளை அதிகாரிகள் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.